கம்பத்தில் ரூ.1.67 லட்சம் போலி பீடி பண்டல்கள் பதுக்கியவர் கைது
கம்பத்தில் ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள போலி பீடி பண்டல்கள் பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
கம்பம்:
கம்பம் பகுதியில் பிரபலமான பீடி நிறுவனங்கள் பெயரில் போலி பீடிகள் புழக்கத்தில் இருந்தது. இதையடுத்து தேனி ஹவுஸ் ரோட்டை சேர்ந்த பிரபல பீடி நிறுவனத்தின் மேலாளர் அற்புதனந்தா கம்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது கம்பம் கே.வி.ஆர் தெருவில் உள்ள நாகூர்கனி(வயது 24) என்பவர் வீட்டில் போலி பீடிகள் பண்டல், பண்டல்களாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்தபோது 6 நிறுவனங்களின் பெயரில் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 820 மதிப்புள்ள போலி பீடிகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பீடி நிறுவன மேலாளர் அற்புதனந்தா கம்பம் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து நாகூர் கனியை கைது செய்தார். மேலும் பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story