குன்னூரில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது


குன்னூரில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது
x
தினத்தந்தி 23 Aug 2021 10:18 PM IST (Updated: 23 Aug 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

குன்னூரில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கூடலூர் ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக தற்போது ஆன்லைன் மூலம் மாணவர்கள் பாடங்களை படித்து வருகின்றனர். 

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்தர தொழில்நுட்ப ஆய்வகத்தில் முறையாக கணினி பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று குன்னூர் கல்வி மாவட்டத்தில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி முகாம் தொடங்கியது. 

இதில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி, காந்திபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, மஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளி, அதிகரட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உள்பட 16 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு மின்னஞ்சல் எடுப்பது, ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் சுவாமி முத்தழகன் பட்டதாரி ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த பயிற்சி ஒரு வாரம் நடக்கிறது. அடுத்த வாரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Next Story