தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்


தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்
x
தினத்தந்தி 23 Aug 2021 10:24 PM IST (Updated: 23 Aug 2021 10:24 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

குன்னூர்

குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் முகாம்

குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னாளகோம்கை என்ற ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சுற்றி தேயிலை தோட்டங்கள், வனப்பகுதி உள்ளது.

இதனால் அடிக்கடி வனவிலங்குகள், வனப்பகுதியில் இருந்து வெளியேறி அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் தேயிலை தோட்டங்களில் 2 குட்டிகள் உள்பட 5 காட்டு யானைகள் அடிக்கடி தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன. மேலும் அவ்வபோது இந்த யானைகள் சாலையில் உலா வருகின்றன.

பொதுமக்கள் பீதி

காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ளதால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். மேலும் பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இதற்கிடையில் காட்டு யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story