விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுஇடங்களில் சிலையை வைத்து பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுஇடங்களில் சிலையை வைத்து பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும்.
ஊட்டி
கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் பொதுமக்கள் கோரிக்கை, குறைகள் அடங்கிய மனுக்களை அளிப்பதற்காக மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். சிவசேனா கட்சியினர் விநாயகர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வருகிற செப்டம்பர் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொற்றின் தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெறவும், விநாயகர் சிலைகள் செய்து கடந்த ஆண்டு முதல் அதனை பாதுகாத்து கொண்டு வரும் கைவினை தொழிலாளர்கள், பூக்கட்டுவோர், பூஜை பொருட்கள் செய்யக் கூடியவர்கள் என லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே, நடப்பு ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு நடந்த தமிழக முதல்-அமைச்சர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story