வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் 984 இடங்களுக்கு 10,675 பேர் விண்ணப்பம்
984 இடங்களுக்கு 10,675 பேர் விண்ணப்பம்
வேலூர்
வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட இளங்கலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகள் உள்ளது. காலை மற்றும் பிற்பகல் என இரு பிரிவுகளாக வகுப்புகள் நடைபெறும். இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் 2021-2022-ம் கல்வியாண்டில் இளங்கலை பிரிவில் 984 இடங்களுக்கு 10,675 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் மலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாளை (புதன்கிழமை) சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 26-ந் தேதி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும், 31-ந் தேதி கலை, வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வும் காலை 9.30 மணிக்கு நடக்கிறது. 31-ந் தேதி தமிழ் ஆங்கில, தொழி பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. கொரோனா பரவலை தடுத்திடும் வகையில் மாணவர்கள் பெற்றோரை உடன் அழைத்து வருவதை தவிர்த்து உரிய சான்றிதழ்களுடன் வரவேண்டும் என்று கூறி உள்ளார்.
Related Tags :
Next Story