ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குவதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குவதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2021 11:11 PM IST (Updated: 23 Aug 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்குதை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

அ.தி.மு.க. அரசால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் முயற்சியால் விழுப்புரம் நகரத்தில் கொண்டு வரப்பட்ட மாணவர்களின் நலன் காக்கும் திட்டமான டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மற்றும் விழுப்புரம் நகரில் டைடல் பூங்கா ஆகியவற்றை மூடும் தி.மு.க. அரசை கண்டித்தும், அமைச்சர் பொன்முடி, லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வண்டிமேடு ராமதாஸ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகவேல், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் அசோக்குமார், டாக்டர் முத்தையன், முன்னாள் சி.எம்.எஸ். தலைவர் ஜானகிராமன், நகர அவைத்தலைவர் பால்ராஜ், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் புஷ்பலதாகோதண்டராமன், பாபு, மல்லிகாமோகன், நகர ஜெயலலிதா பேரவை தலைவர் கோல்டுசேகர், வளவனூர் நகர முன்னாள் செயலாளர் காசிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். முடிவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் திருப்பதி பாலாஜி நன்றி கூறினார்.

கோலியனூர் 

இதேபோல் கோலியனூர் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர்கள் ஜி.ஜி.சுரேஷ்பாபு, பேட்டை வி.முருகன் ஆகியோர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினர்.
இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜயாசுரேஷ்பாபு, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் வளர்மதிமணிமாறன், ஒன்றிய அவைத்தலைவர்கள் சீத்தாகலியபெருமாள், மனோகரன், ஒன்றிய நிர்வாகிகள் ராஜி, சசிக்குமார், ரமேஷ், பாக்யராஜ், அழகேசன், ரவி, சிவா, விஜி, ஜனார்த்தனன், அப்துல்ரகீம், கிளை செயலாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விக்கிரவாண்டி 

விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நகர செயலாளர் பூர்ணராவ், ஒன்றிய செயலாளர்கள் எசாலம் பன்னீர், முகுந்தன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன், மாவட்ட துணை செயலாளர் மலர்விழி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர்கள் நாகப்பன், குமார், ஒன்றிய அணி செயலாளர்கள் சரவணக்குமார், ஜோதிராஜா, கோபாலகிருஷ்ணன், நரசிம்மன், திருநாவுக்கரசு, கண்ணன், செங்கல்வராயன், பெரியான், ராஜாங்கம், ராஜாராமன், அய்யனாரப்பன், வக்கீல் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story