கலவை அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 5,100 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்


கலவை அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 5,100 நெல் மூட்டைகள் நனைந்து சேதம்
x
தினத்தந்தி 24 Aug 2021 12:16 AM IST (Updated: 24 Aug 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

கலவை அருகே உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 5,100 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

கலவை

கலவை அருகே உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 5,100 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததால்  விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

5,100 நெல்மூட்டைகள்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த தோனிமேடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த  நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வந்தனர். மேலும் 4 மாதங்களாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. 

இங்கு ஏற்கனவே பில் போட்ட 1,100 நெல்மூட்டைகளும், பில் போடாத 4,000 நெல் மூட்டைகளும்  வெட்டவெளியில் தகர சீட்டுகளால் போடப்பட்ட மேற்கூரையின்கீழ் வைக்கப்பட்டுள்ளது. இந்த தகர மேற்கூரை உடைந்த நிலையில் இருப்பதால் இங்கு வைக்கப்பட்டுள்ள 5,100 நெல் மூட்டைகளும் மழையில் நனைந்து நெல் முளைத்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

பணம் வழங்கவில்லை

காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒருவர் நெல்கொள்முதல் நிலையத்தில் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.  தற்போது நெல்மூட்டைகள் நனைந்து விட்டதால் அவர் தலைமறைவாகி விட்டார். அவர் 10-க்கும் மேற்பட்ட விவசாயிடம் நெல் மூட்டைகளை வாங்கி எடைபோட்டு உள்ளார். அதுக்கு பில்போட வில்லை. நெல் மூட்டைளும் வைத்த இடத்தில் இல்லை. இதனால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 ஒருசில விவசாயிகளிடத்தில் 40 மூட்டை நெல் வாங்கியிருந்தால் 30 மூட்டைக்கு மட்டும் பணம் வழங்கப்பட்டுள்ளன. மீதி 10 மூட்டைகளுக்கு பணம் வழங்கவில்லை. 

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு பில் போட்ட 1,100 நெல்மூட்டைகளை மட்டுமே நான் எடுத்துக்கொள்வேன். பில்போடாத மூட்டைகளை நீங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். 4 மாதமாக நெல் மூட்டையை எடைபோட்டு வைத்துவிட்டு இப்போது வீட்டுக்கு எடுத்துச்செல்ல கூறுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story