நகைக்கடைகளை மூடி வணிகர்கள் ஆர்ப்பாட்டம்


நகைக்கடைகளை மூடி வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2021 12:22 AM IST (Updated: 24 Aug 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நகைக்கடைகளை மூடி வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

மத்திய அரசின் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி நகைக்கடைகளை மூடி வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹால்மார்க்’எண்

மத்திய அரசு தங்கநகை கடைகளுக்கு எச்.யூ.ஐ.டி. என்ற சட்டத்தை கொண்டு வர உள்ளது. அதன்படி தங்கநகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி ‘ஹால்மார்க்’ அடையாள எண்ணை (எச்.யு.ஐ.டி.) வணிகர்கள் பதிவு செய்ய வேண்டும் என இந்திய தரநிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) அறிவித்திருக்கிறது.
இந்த தனி அடையாள எண் மூலம் தங்கநகை எங்கு உருவாக்கப்படுகிறது யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது?யார் வாங்குகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.
மத்திய அரசின் இந்த சட்டத்துக்கு தமிழகம் முழுவதும் நகை வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை நகைக்கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கண்டன ஆர்்ப்பாட்டம்

திருப்பத்தூரில் நகை வியாபாரிகள் மற்றும் நகை அடகு வியாபாரிகள் சங்கம் சார்பில் காலை 9 மணி முதல் 11 மணி வரை 2 மணி நேரம் கடைகளை அடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகைக்கடை பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 
ஆர்ப்பாட்டத்திற்கு நகை வியாபாரிகள் சங்க தலைவர் டி.டி.சக்கரவர்த்தி, தலைமை வகித்தார். டி.கே.செல்வகுமார் வரவேற்றார். துணைச் செயலாளர் டி.பி.ஜி.மோகன், ரவி ஆகிேயார் முன்னிலை வகித்தனர். செயலாளர் பி.என்.எஸ்.சரவணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார், 
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரும் எச்.யூ.ஐ.டி. சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், நகை வியாபாரிகளை பாதிக்கும் சட்டத்தை உடனடியாக திரும்ப வேண்டும் என்பன உள்்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாங்கிலால் ஜெயின், பாரஸ்சந்த் ஜெயின், அப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story