ரேஷன்கடை அமைக்கக்கோரி பெண்கள் மனு
பாம்புவிழுந்தான் கிராமத்தில் ரேஷன்கடை அமைக்கக்கோரி பெண்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்.
எங்கள் கிராமத்தில் 15 ஆண்டுகாலம் ரேஷன்கடை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கட்டிடம் பாதுகாப்பாக இல்லை என்று கூறி வெங்கடேஸ்வரா காலனிக்கு இடமாற்றம் செய்தனர். பிறகு 4 வழிச்சாலை வந்ததால் செல்வதற்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி நாங்களே சொந்தமாக கட்டிடம் கட்டினோம். அதில் 6 மாத காலம் ரேஷன் பொருட்கள் வழங்கி வந்தனர். தற்போது அதில் ரேஷன்பொருட்கள் வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் நாங்கள் அனைவரும் இந்த மாதம் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை. எங்கள் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட ரேஷன்கடையை எங்கள் கிராமத்தில் உள்ள கட்டிடத்திலேயே செயல்பட வைத்து பொருட்கள் சப்ளை செய்ய வேண்டும். பாம்புவிழுந்தான் கிராமத்தில் ரேஷன்கடை செயல்படும்வரை நாங்கள் அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்க மாட்டோம். அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story