மணல் அள்ளிய 15 மாட்டு வண்டிகள் பறிமுதல்
சின்னதாராபுரம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 15 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
க.பரமத்தி,
ரகசிய தகவல்
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே வெங்கக்கல்பட்டி அமராவதி ஆற்றில் சிலர் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதாக வருவாய் துறையினருக்கு அப்பகுதி மக்கள் ரகசிய தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில் வருவாய் துறையினர் மற்றும் சின்னதாராபுரம் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு 15 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு ஆற்றில் இருந்து சிலர் வெளியே வந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப்பிடிக்க போலீசார் முயன்றனர்.
15 மாட்டு வண்டிகள் பறிமுதல்
அப்போது மாட்டு வண்டியின் உரிமையாளர்கள் மாட்டுடன் வண்டிகளை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, 15 மாட்டு வண்டிகளை சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வருவாய்த்துறையினர் கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட மாட்டு உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story