விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 24 Aug 2021 12:38 AM IST (Updated: 24 Aug 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

காரியாபட்டி, 
காரியாபட்டி தாலுகா எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தில் அவரைக்காய் மற்றும் மல்லிகை பூ பயிரிட்டு வருகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு போதிய மகசூல் கிடைக்க பெறாமல் விவசாயிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.இதனால் எந்த காலத்தில் என்ன  பயிரிட வேண்டும். என்ன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அளிக்கப்பட வேண்டும் என்று விவசாயத்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்தக் கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட தோட்டக்கலை துறை அலுவலர் உத்தரவுப்படி காரியாபட்டி தோட்டக்கலை துறை அலுவலர் ஆயிஷா ரிஸ்வானா, உதவி தோட்டக்கலை அலுவலர் அகல்யா எஸ்.கல்லுப்பட்டி பகுதிக்கு சென்று அவரைக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகளை சந்தித்து அவரைக்காய் குளிர் காலத்தில் பயிரிட வேண்டும் என்றும், மழை காலங்களில் பயிரிட்டால் பூ உதிர்வு ஏற்பட்டு விளைச்சல் குறைவாக இருக்குமென்றும் மற்றும் மல்லிகை பூ பயிரிடும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story