தம்பதி கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தம்பதி கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அல்லிநகரம் கிராமத்தில் தம்பதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் கைதான ஆலத்தூர் தாலுகா மேலஉசேன்நகரம் காலனித்தெருவை சேர்ந்த மருதமுத்துவின் மகன் மணிகண்டன் என்ற நாட்டாத்தி(வயது 22) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் மணிகண்டன் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story