அலையாத்திகாடுகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடலோர பகுதிகளில் அலையாத்திகாடுகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சேதுபாவாசத்திரம்:
கடலோர பகுதிகளில் அலையாத்திகாடுகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அலையாத்தி காடுகள்
தஞ்சை மாவட்ட மீன்பிடி தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் திருவத்தேவன் குத்புதீன், மாவட்ட செயலாளர் தம்பிக்கோட்டை சுப்பிரமணியன் ஆகியோர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தொடங்கி தஞ்சை மாவட்டம் கட்டுமாவடி வரை கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் தனியார் ரால் பண்ணைகள் ஆக்கிரமித்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பொதுமக்கள் ஊற்று தோண்டி அகப்பை மூலம் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது ஊற்று தோண்ட இடம் இல்லாமல் குடம் 10 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் முத்துப்பேட்டை தொடங்கி கட்டுமாவடி வரை இயற்கை சீற்றங்களை அலையாத்திகாடுகள் பாதுகாத்து வந்தது.
மீன்வளம் அழிந்து வருகிறது
காடுகள் முழுவதையும் அழித்து ரால் பண்ணைகள் உற்பத்தியானதால் கடந்த 2018-ம் ஆண்டு கஜாபுயல் சேதுபாவாசத்திரம் பகுதியை சூறையாடி சென்றது. அதுமட்டுமின்றி ரால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கெமிக்கல் கலந்த கழிவுநீர் கடலில் கலப்பதால் மீன் இனப்பெருக்கம் இன்றி மீன்வளம் அழிந்து வருகிறது.
ரால் பண்ணை உரிமையாளர்கள் வளர்க்கப்படும் ராலை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். குளிர்பதன கிடங்கு அமைத்து தர வேண்டும். ரால் குஞ்சுகளை அரசே வழங்க வேண்டும். இதற்கான ஆய்வுக்கூட்டம் உயர் அதிகாரிகள் முன்னிலையில் சேதுபாவாத்திரம் அருகிலுள்ள பிள்ளையார்திடலில் நடைபெற்றுள்ளது. ரால் பண்ணைகள் அதிகரித்தால் கடலோரத்தில் உள்ள பண்ணைகள் கிராமத்தை நோக்கி நகரத்தொடங்கும். அவ்வாறு நடந்தால் ஆழ்குழாய் கிணறுகளில் உப்பு தண்ணீர் வர தொடங்கி வாழ்வாதாரமாக விளங்கும் தென்னை சாகுபடி அழியும். குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும்.
ரால்பண்ணைகளை ஒழிக்க வேண்டும்
எனவே கடலோர பகுதிகளில் அலையாத்திகாடுகளை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் ரால் பண்ணைகளை படிப்படியாக குறைந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை வளங்களை காக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story