மேலும் 13 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பும், இறப்பும் குறைந்து வருகிறது. அந்த வகையில் நேற்று 3 பெண்கள் உள்பட மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதன் மூலம் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 433 ஆனது. அதேநேரம் 5 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 693 ஆக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 104 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Related Tags :
Next Story