பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 Aug 2021 2:34 AM IST (Updated: 24 Aug 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை திட்டத்தில் அதிக நாட்கள் வேலை வழங்க கோரி பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள சங்கன்திரடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் நேற்று பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலசுப்பிரமணியனிடம் மனு வழங்கினர்.

அதில், ‘எங்கள் பகுதியில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்காமல், 40 நாட்கள் மட்டுமே வேலை வழங்குகின்றனர். எனவே அனைவருக்கும் 100 நாட்கள் வேலை தர வேண்டும். மேலும் எங்களது பகுதியில் 7 உரக்குழிகள் கட்ட அனுமதிக்கப்பட்ட நிலையில், 3 உரக்குழிகள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளது. எனவே மற்ற உரக்குழிகளையும் விரைவில் கட்ட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Next Story