2 மகள்களுடன், கால்வாயில் குதித்து பெண் தற்கொலை


2 மகள்களுடன், கால்வாயில் குதித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 24 Aug 2021 3:09 AM IST (Updated: 24 Aug 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரி அருகே காணாமல் போனதாக தேடப்பட்ட தாய், 2 மகள்கள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

பெங்களூரு: பல்லாரி அருகே காணாமல் போனதாக தேடப்பட்ட தாய், 2 மகள்கள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

தாய்-மகள்கள் மாயம்

பல்லாரி மாவட்டம் சண்டூருவை சேர்ந்தவர் பார்வதி (வயது 37). இவருக்கு திருமணமாகி ஸ்ரேயா (16) மற்றும் மானசா (13) ஆகிய 2 மகள்கள் இருந்தார்கள். பார்வதிக்கும், அவரது கணவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதுபோல், கடந்த 2 நாட்களுக்கு முன்பும் தம்பதி இடையே வாக்குவாதம் உண்டானது.

பின்னர் பார்வதி தனது மகள்கள் ஸ்ரேயா, மானசாவை அழைத்து கொண்டு வெளியே சென்றார். ஆனால் அவர்கள் 3 பேரும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. தாய், 2 மகள்களை குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியும், விசாரித்தும் பார்த்தார்கள். ஆனால் 3 பேரையும் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.

கால்வாயில் குதித்து தற்கொலை

இந்த நிலையில், நேற்று காலையில் சண்டூரு அருகே உள்ள கால்வாயில் ஒரு பெண், 2 சிறுமிகளின் உடல்கள் கிடப்பதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

இதுபற்றி சண்டூரு புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கால்வாயில் இருந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவர்கள் காணாமல் போனதாக தேடப்பட்ட பார்வதி, அவரது மகள்கள் ஸ்ரேயா, மானசா என்று தெரிந்தது. அவர்கள் 3 பேரும் கால்வாயில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

குடும்ப பிரச்சினை...

பார்வதிக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததால் தனது 2 மகள்களுடன் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சண்டூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story