சேலம் அரசு ஆஸ்பத்திரியில் முழுநேர கொரோனா தடுப்பூசி மையம்-டீன் வள்ளி சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் முழுநேர கொரோனா தடுப்பூசி மையத்தை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் முழுநேர கொரோனா தடுப்பூசி மையத்தை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி மையம்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நேற்று ஆஸ்பத்திரி டீன் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி தொடங்கி வைத்தார்.
24 மணி நேரமும்
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தில் தடுப்பூசி போடுவதற்கு முன்பு பெயர், வயது, பாலினம், முகவரி, செல்போன் நம்பர், அடையாள அட்டை எண் மற்றும் தடுப்பூசி பெயர், முதலாம் தவணை, 2-ம் தவணை என அனைத்து விவரங்களையும் அங்கு கொடுக்கும் சீட்டில் எழுதி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் போடப்படும். நேற்று ஒரேநாளில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.இதுகுறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி கிடைக்கும் வகையில் இந்த தடுப்பூசி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும், அதாவது முழுநேரமும் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். போதுமான தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் தனபால், உள் தங்கும் மருத்துவர் டாக்டர் ராணி, பேராசிரியர் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story