ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்- படகு சவாரி செய்து உற்சாகம்
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.
ஏற்காடு:
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர்.
ஏழைகளின் ஊட்டி
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு உள்ளுரில் இருந்து மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதுடன், அங்குள்ள பூங்காக்களில் பொழுதை கழிப்பார்கள்.
கொரோனா தொற்று பரவலால் கடந்த 3 மாதங்களாக ஏற்காடு படகு இல்லம் மற்றும் பூங்கா மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக ஏற்காட்டிற்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
படகு சவாரி
கொரோனா ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகளின் படி நேற்று முதல் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். அப்படி வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஏரியில் குடும்பத்துடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பூங்காக்கள் எதுவும் திறக்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே அரசு வழிகாட்டுதலை பின்பற்றி பூங்காக்களை உடனே திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேட்டூர்
இதற்கிடையே அரசு அறிவிப்பின்படி மேட்டூர் பூங்கா நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைவாக இருந்தது. அப்படி வந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஆங்காங்கே அமர்ந்து பொழுதை கழித்தனர். இன்னும் சிலர் அங்குள்ள ஊஞ்சல் உள்ளிட்டவற்றில் விளையாடி பொழுதை கழித்தனர்.
இ்ன்னும் ஒருசில நாட்களில் மேட்டூர் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story