திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையம்; மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்


திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையம்; மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Aug 2021 12:57 PM IST (Updated: 24 Aug 2021 12:57 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர், மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு ரூ.5 ஆயிரத்து 100 மதிப்பிலான கார்னர் சேரையும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,750 மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலியும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.4,150 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் என மொத்தம் ரூ.17 ஆயிரத்து 30 மதிப்பிலான உபகரணங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர் மல்லிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story