முக்காணியில் உப்பளத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


முக்காணியில் உப்பளத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Aug 2021 6:13 PM IST (Updated: 24 Aug 2021 6:13 PM IST)
t-max-icont-min-icon

உப்பளத் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

ஆறுமுகநேரி:
ஆத்தூர் அருகேயுள்ள முக்காணி இசக்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் கணேசன் (வயது 37).
இவருக்கு திருமணமாகி சங்கரம்மாள் என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் உப்பளத் தொழிலாளிகள். கடந்த 23-ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு கணேசன் வீட்டில் இருந்துள்ளார். மனைவி வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் கணேசனுக்கும், அவரது தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபமாக வீட்டுக்குள் சென்ற கணேசன்  கதவை பூட்டிக் கொண்டாராம். நீண்டநேரமாக கதவை திறக்காததால்,  அவரது தாயாரும் அக்கம் பக்கத்தினரும் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்காத நிலையில் வீட்டின் மேல் கூறிய ஆஸ்பெட்டாஸ் சீ்ட்டை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் கணேசன், தன்னுடைய மனைவியின் சேலையில் கழுத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக மனைவி சங்கரம்மாள் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மருத்துவமனை சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story