ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ரேஷன்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். செயலாளர் பெருமாள், பொருளாளர் தனராஜ், இணை செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
-
கொரோனா தொற்று காலத்தில் பணி செய்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவுக்கு பதிலாக கண் விழித்திரை மூலமாக விற்பனை செய்யும் முறையை ஆவணம் செய்ய வேண்டும். கூட்டுறவுத்துறை நியாய விலைக்கடையில் காலியாக உள்ள 3,500 விற்பனையாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உ ள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட இணைச்செயலாளர் அமலா, துணைத்தலைவர்கள் பரசுராமன், வேல்முருகன், மாவட்ட அமைப்பாளர்கள் கோவிந்தராஜ், சேகர், மாவட்ட மகளிரணி செயலாளர் லலிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story