நீலகிரியில் புதிதாக 30 பேருக்கு கொரோனா


நீலகிரியில் புதிதாக 30 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Aug 2021 10:14 PM IST (Updated: 24 Aug 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்து 545 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 38 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். 

இதன் மூலம் இதுவரை 30 ஆயிரத்து 963 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 389 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 670 ஆக்சிஜன் படுக்கைகளில் 89 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 581 படுக்கைகள் காலியாக இருக்கிறது.

Next Story