தர்மபுரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றம் தொடர்பாக நீதிபதிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்
தர்மபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 11-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள் மற்றும் சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த வழக்குகளை சமரசம் பேசி தீர்வு காண்பது தொடர்பாக நீதிபதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் தர்மபுரி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். முதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் வரவேற்றார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், தர்மபுரி உதவி கலெக்டர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சந்தேகங்கள்
கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் தொடர்பான தங்கள் சந்தேகங்களை கேட்டு உரிய விளக்கங்களை பெற்றனர். இதேபோல் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கும் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோனிகா, மகளிர் கோர்ட்டு அமர்வு நீதிபதி சய்யத் பர்க்கத்துல்லா, மோட்டார் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிபதி மணிமொழி, நிரந்தர மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி ராஜா, சார்பு நீதிபதிகள், நீதித்துறை மாஜிஸ்திரேட்டுகள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சார்பு நீதிபதி கலைவாணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story