தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
தடுப்பூசி போட குவிந்த பொதுமக்கள்
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி போட வருகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கூடுதலாக தடு்ப்பூசி பெறப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகரில் நேற்று கூடுதலாக பல இடங்களில் தடுப்பூசி வழங்க ஒதுக்கப்பட்டிருந்தது.
இதனால் தடுப்பூசி போட பலரும் அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் குவிந்தனர். தென்னம்பாளையம் மாநகராட்சி பள்ளி, அரண்மனைப்புதூர் அரசு பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தினர். முன்னதாக தடுப்பூசி செலுத்தும் முன்பு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story