ஆழியாறு வால்பாறையில் சுற்றுலாவை மேம்படுத்த முடிவு


ஆழியாறு வால்பாறையில் சுற்றுலாவை மேம்படுத்த முடிவு
x
தினத்தந்தி 24 Aug 2021 10:52 PM IST (Updated: 24 Aug 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு, வால்பாறையில் சுற்றுலாவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஆய்வு மேற் கொண்டார்.

பொள்ளாச்சி

ஆழியாறு, வால்பாறையில் சுற்றுலாவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிகாரி ஆய்வு மேற் கொண்டார். 

அதிகாரி ஆய்வு 

பொள்ளாச்சி அருகே ஆழியாறு, டாப்சிலிப், குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, சோலையார் அணை, சின்னக்கல்லார் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மையங்கள் உள்ளன. கொரோனா பரவல் குறைந்து வருவதால், சுற்றுலா மையங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதனால் வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் ஆழியாறு, வால்பாறையில் சுற்றுலாவை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி துறை அதிகாரி அரவிந்த் குமார் ஆய்வு மேற்கொண்டார்.

பாதுகாப்பு வழிமுறைகள் 

வால்பாறை மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு, சோலையார் அணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. ஆய்வின் போது உதவி அதிகாரி சதீஷ்குமார் மற்றும் சுற்றுலா கவுன்சில் உறுப்பினர்கள் பிரபாகரன், அலி, சுரேஷ், பிரகாஷ், சாமிநாதன், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதுகுறித்து சுற்றுலாத்துறை மாவட்ட அதிகாரி அரவிந்த்குமார் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன. 

எனவே சுற்றுலா தலங்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறை கள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

சுற்றுலா பயணிகள் வரவேற்பு 

மேலும் ஆழியாறு அருகே மலைப்பாதையில் 9-வது கொண்டை ஊசி வளைவு, சோலையார் அணை, ரொட்டிக்கடை பகுதி, சிலுவை மேடு ஆகிய பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் முகநூல் மூலம் நேரடியாக 9-வது கொண்டை ஊசி வளைவின் வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் வரவேற்பு கிடைத்து உள்ளது. 

மேலும் வால்பாறை பகுதிகளில் என்னென்ன சுற்றுலா தலங்கள் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து, அவற்றை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story