பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு சான்றிதழ்


பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு சான்றிதழ்
x
தினத்தந்தி 24 Aug 2021 10:53 PM IST (Updated: 24 Aug 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு சான்றிதழ்

திருப்பூர்,
மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் சமர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திருப்பூரில் திறமையான பனியன் தொழிலாளர்களை உருவாக்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு நேற்று ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கு சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை தாங்கினார். 
இணைச்செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். தொழிலாளர் பயிற்சி கமிட்டி தலைவர் முருகேஷ், பெண்கள் கமிட்டி தலைவர் சுமிதா, திட்ட இயக்குனர் கணேஷ் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story