போலி உரம் பூச்சி மருந்து முகவர்கள் குறித்து ஆய்வு
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் போலி உரம், பூச்சி மருந்து முகவர்கள் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் போலி உரம், பூச்சி மருந்து முகவர்கள் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்
பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் உரிமம் பெறாத, அங்கீ காரம் இல்லாத நிறுவன பிரதிநிதிகள் மூலம் தென்னந்தோப்பு களில் இயற்கை உரமிடுதல் மற்றும் பூச்சி மருந்து செலுத்தப்படுவ தாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு), வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) மற்றும் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு வேளாண்மை உதவி இயக்குனர், மற்றும் வேளாண்மை அலுவலர்கள் கொண்ட ஆய்வு குழு அமைக்கப்பட்டது.
திடீர் ஆய்வு
இந்த குழுவினர் ஜமீன்ஊத்துக்குளி, நடுப்புணி, சேத்துமடை, ஆனைமலை, திவான்சாபுதூர் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தனியார் உரக்கடை மற்றும் பூச்சி மருந்து கடைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் போலி உர மற்றும் பூச்சி மருந்து முகவர்கள் குறித்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் சில விவசாயிகளிடமும் விசாரணை மேற்கொள்ளப் பட்டது. அப்போது தென்னை மரங்களுக்கு இயற்கை உரம் மற்றும் பூச்சி மருந்து கட்டுதல் போன்றவை தங்களது தோட்டங் களில் எதுவும் செய்யவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கோவை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியதாவது:-
விவரங்கள் சேகரிப்பு
உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் வேளாண்மை துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் உரிமம் பெறாத விற்பனை முகவர்கள் விவரங்களை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இதுபோன்ற தகவல் விவசாயிகளுக்கு தெரியவந்தால் வேளாண் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம்.
இது தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வாட்ஸ்-அப் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story