சொத்து தகராறில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு


சொத்து தகராறில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 24 Aug 2021 11:07 PM IST (Updated: 24 Aug 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

பூவந்தி அருகே சொத்து தகராறில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்த அரசனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முருகன், பாலசுப்பிரமணியன். இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள். இவர்களுக்கு நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பாலசுப்பி்ரமணியன் மகன் 16 வயது சிறுவன், கிராமத்தில் உள்ள மந்தைச்சாவடி முன்பு பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த முருகன் மகன் தீபன் (30), சிறுவனை அவதூறாக பேசி உன் தந்தையால் எனக்கு சொத்து இல்லாமல் போச்சு என்று சொல்லி கையில் வைத்திருந்த அரிவாளால் சிறுவனின் பின்கழுத்தில் வெட்டினார். இதில் காயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தீபனை போலீசார் கைது செய்தனர்.

Next Story