நாமக்கல் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி-லாக்கரில் இருந்த ரூ.2¾ லட்சம் தப்பியது


நாமக்கல் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து திருட முயற்சி-லாக்கரில் இருந்த ரூ.2¾ லட்சம் தப்பியது
x
தினத்தந்தி 24 Aug 2021 11:22 PM IST (Updated: 24 Aug 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.2¾ லட்சம் தப்பியது.

நாமக்கல்:
டாஸ்மாக் கடை
நாமக்கல் அருகே உள்ள புதன்சந்தை எஸ்.உடுப்பம் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துக்கொண்டு மேற்பார்வையாளர் செல்வகுமார் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவர் நல்லிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையினுள் சென்று பார்வையிட்டனர்.
ரூ.2¾ லட்சம் தப்பியது
அப்போது அங்கிருந்த பிரிட்ஜில் 2 பீர்பாட்டில்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. மேலும் கடை கேட்டின் கதவில் உள்ள பூட்டை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள், கடையில் இருந்த லாக்கரை உடைக்க முயற்சித்து உள்ளனர். ஆனால் அதை உடைக்க முடியாததால் அதில் இருந்த ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் தப்பியது தெரிந்தது.
இதற்கிடையே மர்ம நபர்கள் லாக்கரை உடைக்க முயற்சி செய்யும் முன்பு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் வயர்களை துண்டித்து உள்ளனர். இதனால் கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story