ஜோலார்பேட்டை அருகே; ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி அலுவலகத்துக்கு பூட்டு
ஜோலார்பேட்டை அருகே ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே ஊராட்சி செயலாளரை மாற்றக்கோரி பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு பூட்டுப்போட்டு, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 வருடங்களாக...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவரது மனைவி அருட்செல்வி (வயது 45). இவர், சின்னகம்மியம்பட்டு ஊராட்சியில் 25 வருடங்களுக்கும் மேலாக ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சி செயலாளர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதில் சின்னகம்மியம்பட்டு ஊராட்சி செயலாளர் அருட்செல்வி பெரியகம்மியம்பட்டு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அலுவலகத்துக்கு பூட்டு
ஆனால் அருட்செல்வி தனது கணவருக்கு விபத்தில் முதுகு தண்டுவடம் அடிபட்டு வீட்டோடு இருப்பதால் அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளதை காரணம் காட்டி பணிமாறுதல் உத்தரவை ரத்து செய்து அதே ஊராட்சியில் பணிபுரிந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் இவர் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வில்லை. ஊராட்சி பகுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றவில்லை என்றும், இவர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார் என கூறி அப்பகுதி மக்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு, அலுவலகம் முன்பு உள்ள சின்னகம்மியம்பட்டு - திருப்பத்தூர் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் எழுத்து மூலம் மனுவாக எழுதி கையெழுத்திட்டு கொடுத்தால் அதிகாரிகளிடத்தில் சமர்ப்பித்து, நிர்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
உடனே பொதுமக்கள் மனு கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story