அணில் வேட்டைக்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி


அணில் வேட்டைக்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 24 Aug 2021 11:40 PM IST (Updated: 24 Aug 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

அணில் வேட்டைக்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலி

அணைக்கட்டு 

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த முள்வாடி மலை கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் பூவரசன் (வயது 13). அதே பகுதியை சேர்ந்த அழகேசன் மகன் பிரகாஷ் (15). திருமூர்த்தி மகன் திருக்குமரன் (8). மணி மகன் சுபாஷ் (15).

 இவர்கள் 4 பேரும்நேற்று முன்தினம் அணில் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பங்களாமேட்டில் உள்ள சேட்டு என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் அணில் வேட்டையாடியபோது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியில் பூவரசன் மிதித்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானான். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்தநிலையில் காலையில் அணில் வேட்டைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேடிபார்த்தனர். அப்போது நேற்று காலை ஒடுகத்தூர் பஸ் நிலையத்தில் திருக்குமரனை பார்த்துள்ளனர். அவன் நடந்த சம்பவத்தை கூறி உள்ளான். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பூவரசன் உடலை மீட்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சென்று பூவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பங்களாமேடு கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story