திருப்பத்தூர்,
புதுக்கோட்டை மாவட்டம் நல்லமாச்சத்திரத்தை சேர்ந்தவர் பழனிச்சசமி மகன் சுப்பிரமணியன் (வயது23). இவர் நேற்று முன்தினம் மாலை புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை நோக்கி பைபாஸ் சாலையில் சரக்கு வாகனத்தில் சென்றார்.அப்போது நெடுமறம் அருகே சென்ற போது திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கார்த்திக்ராஜா(20), அவரது தாயார் செல்வி(40) ஆகியோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.