தொப்பூர் கணவாய் தொடர் விபத்து லாரிகள் கார்கள் மோதல் 14 பேர் காயம் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


தொப்பூர் கணவாய் தொடர் விபத்து லாரிகள் கார்கள் மோதல் 14 பேர் காயம் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2021 11:49 PM IST (Updated: 24 Aug 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் தொடர் விபத்து காரணமாக கன்டெய்னர் லாரிகள், கார்கள் மோதி டிரைவர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் தொடர் விபத்து காரணமாக கன்டெய்னர் லாரிகள், கார்கள் மோதி டிரைவர் உள்பட 14 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர் விபத்துகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கேரளாவிற்கு டிரான்ஸ்பார்ம் உதிரி பாகங்கள் ஏற்றிக்கொண்டு ஒரு டிரைலர் லாரி, தர்மபுரி மாவட்டம் வழியாக நேற்று விடியற்காலை வந்து கொண்டு இருந்தது. தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்ற ஒரு லாரி மற்றும் 5 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. 
இந்த விபத்தில் கார்களில் வந்த வெங்கட்ராவ் (வயது 51), ராமச்சந்திரன் (28), மெகபூப்சேத் (47), வெங்கடாசலம் (49), லாரி டிரைவர் கோபால்பல்கீர் (26) உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார், சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
கார் மீது கன்டெய்னர் லாரி மோதல்
இதேபோல் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி தொப்பூர் கணவாய் முதல் வளைவு பகுதியில், முன்னால் சென்ற கார் மீது மோதியது. இதில் காரில் வந்த பெண் உள்பட 4 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார், சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் சிகிச்சை பெற்று வீடு சென்றனர்.
தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து லாரிகள், கார்கள் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார், சுங்கச்சாவடி ரோந்து படையினர் லாரிகள், கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story