பேரணாம்பட்டில் 2 டன் ரேஷன் அரிசி மினி வேனுடன் பறிமுதல்
2 டன் ரேஷன் அரிசி மினி வேனுடன் பறிமுதல்
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு டவுன் வீ.கோட்டா ரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் வேலூர் மாவட்ட பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் பேரணாம்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஈத்கா மைதானம் அருகில் கர்நாடக பதிவெண் கொண்ட மினிவேனில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அங்கு அதிகாரிகள் சென்றனர். அவர்களை பார்த்தவுடன் மர்ம ஆசாமிகள் இருட்டில் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.
வேனை சோதனையிட்டதில் 40 மூட்டைகளில் மொத்தம் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக வேனில் ஏற்றியதும் தெரியவந்தது. அரிசியுடன் வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வேலூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி தலைமறைவான அரிசி கடத்தல் ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story