தொண்டி,
தொண்டி பகுதியில் கடலோர பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக கடலோர காவல் படை போலீசார் காலை முதல் மாலை வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அதன் அடிப்படையில் தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாணிக்கம், கருணாநிதி, தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் சோளியக்குடி முதல் எஸ்.பி.பட்டிணம் வரை உள்ள காரங்காடு, முள்ளிமுனை, புதுப்பட்டினம், நம்புதாளை, தொண்டி, தாமோதரன் பட்டிணம், பாசிப்பட்டினம், வட்டாணம் போன்ற கடலோர பகுதி கிராமங்களில் படகுகளை சோதனையிட்டு ஆவணங்களை ஆய்வு செய்தனர்.மேலும் அந்நியர்கள், தீவிரவாதிகள் ஊடுருவல் உள்ளனவா? என்பதையும் அதிநவீன படகு ரோந்து பணி மூலம் கண்காணித்தனர்