கருத்தரங்கம்


கருத்தரங்கம்
x
தினத்தந்தி 25 Aug 2021 12:54 AM IST (Updated: 25 Aug 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

சாத்தூர்,
சாத்தூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் சரக  துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ் தலைமை தாங்கினார். சாத்தூர் டவுன் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சொர்ண மணி, நெடுஞ்சாலைப் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோலியம் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ஜெயகுமார் எரிபொருள் சேமிப்பு மற்றும் சாலை விபத்துகள் இல்லாத பயணம் மேற்கொள்ளும் முறைகள் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் செய்திருந்தார். இதில் ஓட்டுனர் பயிற்சி மாணவர்கள், சாத்தூர் அரசு போக்குவரத்து ஓட்டுனர்கள், ஆட்டோ, கார், வேன் ஓட்டுனர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story