சிவகிரியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு


சிவகிரியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 25 Aug 2021 1:35 AM IST (Updated: 25 Aug 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி தாலுகா பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

சிவகிரி:
சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் யூனியன் ரத்தினபுரி மங்கம்மாள் சாலையில் உள்ள சிறுகுளம், துலுவன் குளம், வெள்ளானைக்கோட்டை பெரிய குளம் ஆகிய மூன்று குளத்திற்கு நீர்பிரியும் நவ்வாசோலை ஓடையின் மீது நபார்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது பாலம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரவணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் நெற்கட்டும் செவலில் நடைபெற்ற பணிகளையும், பசுமை வீடு திட்டத்தின்கீழ் ஒரு வீட்டிற்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் நெல்கட்டும் செவல் பச்சேரியில் 42 பயனாளிகளுக்கு காலனி  வீடு கட்டும் பணிகளையும், தலைவன் கோட்டையில் சுமார் ரூ.8 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளையும் கள ஆய்வு செய்தார்.
வாசுதேவநல்லூர் யூனியன் ஆணையாளர் சந்திரா, வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள், உதவி பொறியாளர் மார்க்கோனி, பணி மேற்பார்வையாளர்கள் ராமசாமி, ஜெயமாரி, சாலை ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story