பெண் உள்பட 2 பேர் கைது


பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2021 2:31 AM IST (Updated: 25 Aug 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

சேதுபாவாசத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். 
விவசாயி வெட்டிக்கொலை
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருேக உள்ள தில்லங்காட்டை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 52). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலை இரு சக்கர வாகனத்தில் பூங்குடிக்காட்டில் உள்ள தனது தாய்மாமன் தங்கையன் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு 8 மணியளவில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
கறம்பக்காடு  என்ற இடத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள மயான சாலையில் வந்து கொண்டு இருந்தபோது அவரை ஒருவர் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் செல்வகுமார் பிணமானார்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேதுபாவாசத்திரம் போலீசார் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட செல்வகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இது தொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் தாய்மாமன்  தங்கையன் வீ்ட்டில் இருந்த மதுக்கூரை சேர்ந்த  சுதா(44) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சுதாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். ஆய்வில் தில்லங்காட்டை சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் சுதா பேசியது தெரியவந்தது. இதன்பேரில் ராமலிங்கத்தை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செல்வகுமாரை கொலை செய்தது ெதரியவந்தது. இதைத்தொடர்ந்து  ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
வாக்குமூலம்
கைதான ராமலிங்கம் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனது மனைவி சுபாஷினி(32) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி தற்கொலைக்கு செல்வகுமார்தான் காரணம். எனவேதான் 2 மாதங்களாக மனம் வெறுத்து இருந்த நான் திட்டமிட்டு செல்வகுமாரை கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து ெகாலைக்கு உடந்தையாக இருந்த சுதாவையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story