சேலம் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு -நாளை தொடங்குகிறது
சேலம் கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
சேலம்:
சேலம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலம் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பிரிவில் பி.காம், பி.ஏ., பி.எஸ்சி என 20 பாடப்பிரிவுகளில் 1,460 முதலாமாண்டு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இளநிலை பட்டப்படிப்பிற்கு 13 ஆயிரத்து 550 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. துறை வாரியான தற்காலிக தேர்வு பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.
இந்தநிலையில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முதல் நாளன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு ஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தமிழ் மரபினர், என்.சி.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வணிகவியல், வணிகவியல் (கணினி பயன்பாட்டியல்), வணிக நிர்வாகவியல், அரசியல் சார் அறிவியல், பொது நிர்வாகவியல் ஆகிய பிரிவுகளுக்கும், 28-ந் தேதி தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், கூட்டுறவியல் ஆகிய பிரிவுகளுக்கும் நடைபெறுகிறது. 31-ந் தேதி இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புவியியல், புவியமைப்பில் ஆகிய பிரிவுகளுக்கும், 1-ந் தேதி கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய பிரிவுகளுக்கும் நடக்கிறது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story