திருச்செந்தூர் அருகே மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
திருச்செந்தூர் அருகே மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள வெள்ளாளன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசிங். இவருடைய மனைவி பிளாரென்ஸ் (வயது 68). இவர் நேற்று காலை 6.30 மணியளவில் வீட்டின் முன்பு சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிளாரென்ஸ் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார
Related Tags :
Next Story