லாரி மோதி முதியவர் பலி
லாரி மோதி முதியவர் பலியானார்.
பரமக்குடி,
முதுகுளத்தூர் தாலுகா நல்லுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது65). இவர் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் பரமக்குடிக்கு வந்துள்ளார். அப்போது பரமக்குடி அருகே உள்ள காந்தக்குளம் முனியப்ப சுவாமி கோவில் அருகில் வரும்போது முதுகுளத்தூரில் இருந்து பரமக்குடிக்கு ஜல்லி ஏற்றி வந்த லாரி திடீரென காமாட்சியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது லாரியின் பின்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் காமாட்சி உடல் நசுங்கி சம்பவ இடத் திலேயே துடிதுடித்து பலியானார். உடனே லாரி டிரைவர் கடலாடி தாலுகா பூதங்குடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (36), பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந் தார். இதுகுறித்து எமனேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story