தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்


தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
x
தினத்தந்தி 25 Aug 2021 9:14 PM IST (Updated: 25 Aug 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூர் அருகே உள்ள கெட்டுப்பட்டியை சேர்ந்தவர் முனுசாமி, இவரது மகள் மகா (வயது19). இவர் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் புழுதிகரையை சேர்ந்த பன்னீர்செல்வம் (21) என்பவரும் படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். இதனிடையே மகாவுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதையடுத்து காதல்ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கொல்லாபுரி அம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்திற்கு மகாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மகாவும், பன்னீர்செல்வமும் பாதுகாப்பு கேட்டு தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் இரு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story