பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பொம்மிடி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80). இவருடைய மனைவி சுலோச்சனா(75). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களை கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி இரவு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பில்பருத்தி பகுதியை சேர்ந்த வேலவன்(24), பிரகாஷ்ராஜ் (19), முகேஷ்(19), ஹரீஷ்(20), சந்துரு(22), எழிலரசன்(26) ஆகிய 6 பேர் வயதான தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் வயதான தம்பதி கொலை வழக்கில் தொடர்புடைய பிரகாஷ்ராஜ், முகேஷ், ஹரிஷ் ஆகிய 3 பேர் மீதும் பொம்மிடி போலீசார் குண்டர் சட்டத்தில் கூடுதல் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தம்பதி கொலையில் தொடர்புடைய 3 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story