திண்டிவனத்தில் மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு
திண்டிவனத்தில் மளிகை கடையில் ரூ.30 ஆயிரத்தை திருடிய மா்மநபா்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
திண்டிவனம்,
திண்டிவனம் மயிலம் ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் முத்து(வயது 49). இவர் மேம்பாலத்தின் கீழ் நாகலாபுரம் செல்லும் ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கடையை திறந்தார். அப்போது கடையில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் கல்லா பெட்டியும் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை காணவில்லை. நள்ளிரவில் மர்ம நபர்கள், கடையின் மேற்கூரையை பிரித்து, உள்ளே நுழைந்து பணத்தை திருடிக் சென்றுள்ளனர்.
மேலும் கடையின் மாடியில் உள்ள கணினி அகாடமியின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கு திருட ஏதும் கிடைக்காததால், மேசை, நாற்காலிகளை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story