சோலையாறு அணை நீர்மட்டம் 159 அடியாக குறைந்தது
வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை நீர்மட்டம் 159 அடியாக குறைந்தது.
வால்பாறை
வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை நீர்மட்டம் 159 அடியாக குறைந்தது.
சோலையாறு அணை
வால்பாறை அருகே சோலையாறு அணை உள்ளது. வால்பாறை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், இந்த அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால் இந்த அணை கடந்த மாதம் 23-ந் தேதி முழு கொள்ளளவான 160 அடியை தாண்டி நிரம்பியது. இதனால் அணையில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் அதிகமாக வந்ததால் அணையின் நீர்மட்டம் 160 அடிக்கு மேலாகவே இருந்தது.
நீர்மட்டம் குறைந்தது
இந்த நிலையில் தற்போது வால்பாறை பகுதியில் மழை பெய்வது குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்த தால், அணையின் நீர்மட்டம் ஒரு அடி குறைந்து 159 அடியாக உள்ளது.
அணையில் இருந்து தொடர்ந்து பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதியில் மழை பருவமழை நீடித்தால் இந்த அணை மீண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
அதிகாரிகள் கண்காணிப்பு
தற்போது அணைக்கு வினாடிக்கு 1007 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 1200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வால்பாறை பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீர் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story