பொதுமக்களிடம் பணம் கேட்கும் வீடியோ வைரல் கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
பொதுமக்களிடம் பணம் கேட்கும் வீடியோ வைரல் தொடா்பாக கிராம உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நவமால்காப்பேர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் ஷபீராபீபி. இவர் சாதி சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் பணம் கேட்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் விசாரணை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர் ஷபீரா பீபியை அங்கிருந்து காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்தார். மேலும் இவருக்கு உடந்தையாக செயல்பட்ட கிராம உதவியாளர் ஷபீனாபேகம் என்பவரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story