திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியாகினர்.
72 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பாிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2 பேர் பலி
தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 880-ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 65 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்து 122 ஆக உள்ளது.
மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 836 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 922-ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story