காயமடைந்த காகத்திற்கு சிகிச்சை அளித்த வாலிபருக்கு பாராட்டு
காயமடைந்த காகத்திற்கு சிகிச்சை அளித்த வாலிபருக்கு பாராட்டு
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டியை அடுத்த தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 27). அந்த பகுதியில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை ஆனந்தன் வீட்டருகே காகம் ஒன்று அடிபட்டு காயத்துடன் பறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. இதை கண்ட ஆனந்தன் உடனடியாக அந்த காகத்தை மீட்டு, திருப்பூர் கால்நடை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் காகத்திற்கு சிகிச்சை வழங்குமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து காயமடைந்த காகத்திற்கு ஊழியர்கள் மருந்து தடவி, கட்டு போட்டனர். இதைத்தொடர்ந்து அந்த காகத்தை ஆனந்தன் மீண்டும் எடுத்து வந்து, காட்டுப்பகுதியில் விட்டார். ஆனாலும் காகம் பறக்க முடியாமல் தவித்தது. ஆறறிவு படைத்த மனிதர்கள் பலர் சக மனிதன் அடிபட்டு, சாலையில் கிடந்தாலும் உதவி செய்ய முன்வராத சூழலில், ஐந்தறிவு கொண்ட காகம் அடிபட்டு தவித்தபோது, அதை கருணை உள்ளத்தோடு மீட்டு, சிகிச்சை வழங்கி காப்பாற்றிய ஆனந்தனை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள்.
Related Tags :
Next Story