தீயணைப்புதுறை சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி
நன்னிலத்தில், தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
நன்னிலம்:
நன்னிலத்தில், தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
பேரிடர் மேலாண்மை பயிற்சி
நன்னிலம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில், தாசில்தார் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சிறைத்துறை மற்றும் காவல்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பேரிடர் கால மீட்புப் பயிற்சி நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் நடந்தது. தீயணைப்பு வீரர்கள், பேரிடர் காலங்களில் தங்களையும் காத்துக் கொண்டு பிறரையும் எவ்வாறு காப்பாற்றுவது என்பது பற்றி பல்வேறு செயல் விளக்கங்களைச் செய்து காண்பித்தனர்.
கியாஸ் சிலிண்டர் விபத்து
குறிப்பாக பேரிடர் கால முன்களப்பணியில் உள்ள அரசு அலுவலர்கள் முன்னெச்சரிக்கையுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கி கூறப்பட்டது. மேலும் கியாஸ் சிலிண்டர் விபத்தில் எவ்வாறு மீட்பது போன்றவைகளை செய்து காட்டினர். தீயணைப்புத் துறையில் என்னென்ன உபகரணங்கள் உள்ளது. அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது போன்ற பல்வேறு பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில் நன்னிலம் தாசில்தார் பத்மினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா, சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆனந்தன், பேரூராட்சி செயல் அலுவலர் ஹரிராமமூர்த்தி, அலுவலர் ரவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story