வேலூரில் புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைகளுக்கு அபராதம்
புகையிலை பொருட்கள் விற்ற மளிகை கடைகளுக்கு அபராதம்
வேலூர்
வேலூர் கொணவட்டம், முள்ளிப்பாளையம், சேண்பாக்கம் பகுதிகளில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்மசாலா உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தவேல் மற்றும் சிலர் அந்த பகுதிகளில் உள்ள மளிகை, பெட்டிக்கடைகளில் நேற்று திடீரென சோதனை செய்தனர்.
17 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 2 மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஒரு கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை தொடர்ந்து விற்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story